முதற்பக்கம்

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.
- திருவள்ளுவர்

காசாங்காடு கல்வி இணைய தளத்தில் உங்களை காண்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். தங்களது கல்வி மேம்பாட்டில் இந்த இணைய தளம் பெரும் பங்களிக்கும் என நம்புகிறோம். இந்த தளம் காசாங்காடு கிராம மக்கள் மட்டுமன்றி அனைவருக்கும் பயன்படும் விதத்தில் அமையும் என்பதில் ஐயம் இல்லை.

இந்த கல்வி இணைய தளத்தில், கல்வியின் பல்வேறு பாதைகளை பற்றிய முன்னோட்டம், மற்றும் அதன் சுட்டிகள் தான் இங்கு விவாதிக்கப்படும்.

கிராமத்தில் மொத்தம் ஐந்து பள்ளிகள் உள்ளன. மற்ற கிராமத்தில் இருந்து இங்கு வந்து படிப்பவர்களும் உண்டு, எங்கள் கிராமத்தில் இருந்து வெளியூர் சென்று படிப்பவர்களும் உண்டு.

கிராமத்தில் உள்ள பட்டதாரிகள் மற்றும் பட்டயதாரிகள் பற்றி விபரங்கள் இணைத்துள்ளோம். தங்கள் தொழில் தொடங்க வேண்டுமெனின் உங்கள் தேவைகேற்ப திறன் பெற்ற தேர்சியாளர்கள் எங்கள் கிராமத்திலேயே கிடைக்கும் வசதி.

கிராமத்தில் உள்ள பள்ளிகளின் வசதிகள் பற்றி அரசாங்க அதிகாரிகளிடம் கேட்டுள்ளோம். அவைகள் கிடைத்தபின் கிராம பள்ளிகள் பற்றி மேலும் இங்கு விவரிக்கபடும்.

கடவுள் நமக்கு அளித்த அறிவாற்றலை பயன்படுத்துவோம். தரமான வாழ்க்கையை பின் பற்றுவோம்.

தங்கள் தேடும் தகவல்கள் இல்லாவிடில் தயவு செய்து நேரடியாக தகல்வல்களை சேர்க்கவும். தகவல் பதிய அனுமதி வேண்டுமெனின் இணைய குழுவை தொடர்பு கொள்ளவும்.


அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.