10'ம் படிப்பிற்கு பிறகு

வாழ்கையின் முதல் கல்வி படியை தாண்டி விட்டீர்கள்.

இனி எடுக்க போகும் முடிவுகள் தான் உங்கள் கல்வியின் வாழ்கை பாதையை நிர்ணயிக்கும்.

மேற்கொண்டு நீங்க படிப்பதற்கு கீழ்க்கண்ட வாய்ப்புகள் உள்ளன:
  1. பட்டயம் (Diploma)
  2. அறிவியல் குழு (Science Group)
  3. கணக்கு குழு (Maths Group)
  4. வணிக குழு (Commerce Group)
உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தங்கள் குழுவை தேர்ந்தெடுக்கவும். உங்களின் எதிர்கால் லட்சியத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக வணிக குழுவை எடுத்து கொண்டு பொறியியல் வல்லுனராக ஆக முடியாது.

எந்த படிப்பு  உயர்ந்தது எது தாழ்ந்தது என்பது கிடையாது. அணைத்து கல்வியையும் ஆர்வத்துடன் பயின்றால் உங்களை வாழ்கையின் உச்சிக்கு அதுவே எடுத்து செல்லும். அது போன்று அவ்வையின் சொல்படி "கற்றது என்றும் கையளவு தான்". உங்கள் வழக்கை மேம்பட எவையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டுமோ அவைகளை தெரிந்துகொள்வது அவசியம். கல்வியே தரமான வாழ்க்கைக்கு பெரிதும் உறுதுணையாக இருக்கும்.


Comments